ஈமு கோழிகள் - ஓர் அறிமுகம்



ஈமு கோழிகள் ரேட்டைட் இனத்தை சேர்ந்தவை. இப்பறவைகள் அவற்றின் விலை மதிப்பு மிக்க இறைச்சி, முட்டைகள், தோல், தோலிலிருந்து பெறப்படும் எண்ணெய் மற்றும் இறகுகள்

போன்றவற்றுக்காக வளர்க்கப்படுகின்றன. இப்பறவைகள் எந்த தட்பவெப்பநிலையிலும் தாங்கி வளரக்கூடியவை. ஈமு மற்றும் ஆஸ்டிரிச் பறவைகள் ஒரே சமயத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும் ஈமு வளர்ப்பே அதிகம் பிரபலமடைந்து வருகிறது.

ஈமு, ஆஸ்டிரிச், ரியா, கேசோவரி மற்றும் கிவி ஆகிய பறவைகள் ரேட்டைட் இனத்தை சார்ந்தவை. இவற்றுள் ஈமு

மற்றும் ஆஸ்டிரிச் கோழிகள் உலகத்தின்

பல பகுதிகளில் அவற்றின் இறைச்சி, தோல், தோலிலிருந்து பெறப்படும் எண்ணெய், இறகுகள் ஆகியவற்றுக்காக வணிக ரீதியாக வளர்க்கப்படுகின்றன. இப்பறவைகள் வெப்பமான நாடுகளிலும், குளிர் பிரதேசங்களிலும் வளரக்கூடியன. இப்பறவைகள் திறந்த வெளியிலும், தீவிர முறையிலும் வளர்க்கப்படுகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் ஈமு கோழி வளர்ப்பில் முதலிடம் வகிக்கின்றன



Related Keywords: Emu, Emu Oil, Emu Birgds, Emu Farmins, Emu Farming, Emu Meat, Emu Business, Emu Farming idea, Emu Farm in india, Emu news, Emu information, Emu Foods